< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

'தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன' - கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
2 Oct 2024 7:29 PM IST

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு எதிரான பாகுபாடு நீங்கவில்லை என்று தெரிவித்தார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்களின்படி, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் சமூகநீதி பேசுகிறார்களே தவிர நடைமுறையில் பட்டியலின மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள், குடிநீர் தொட்டியில் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்டு வெட்கப்படுவதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகள்