< Back
மாநில செய்திகள்
குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த  போலீசார் அறிவுறுத்தல்
கரூர்
மாநில செய்திகள்

குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
5 May 2023 12:02 AM IST

குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்க வேண்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களின் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் முக்கிய கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், நெடுஞ்சாலை அருகில் அமைந்திருக்கும் தனிவீடுகள் போன்ற பகுதிகளில் பொதுமக்களிடம் குற்ற தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் அனைத்து கிராமங்களிலும் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள், தனிநபர் வீடுகள், தெருக்கள் மற்றும் சாலைகளை நோக்கி அந்நிய சந்தேக நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்க வேண்டி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

திருட்டு தடுப்பு சாதனங்கள்

வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது திருட்டு தடுப்பு சாதனங்களை வீடுகளில் பொருத்தி கொள்ள வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வீடுகளில் வைக்க வேண்டாம். வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்தி கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்நிய சந்தேக நபர்களின் நடமாட்டம் இருப்பின் அதுகுறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் அல்லது போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்.94981 81222 என்ற எண்ணிற்கோ தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்