< Back
மாநில செய்திகள்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; சென்னை சேப்பாக்கத்தில் 8-ந்தேதி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
மாநில செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி; சென்னை சேப்பாக்கத்தில் 8-ந்தேதி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தினத்தந்தி
|
6 Oct 2023 8:56 PM IST

சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண வரும் பார்வையாளர்கள் இரண்டு கட்ட சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் மைதானத்தில் பார்வையாளர்கள் ஏதேனும் அசம்பாவிதத்தில் ஈடுபடாமல் இருப்பதை கண்காணிக்கவும், பாதுகாப்பு சோதனைகளுக்காகவும் 300 தனியார் பாதுகாவலர்களை ஈடுபடுத்த சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், சேப்பாக்கம் பகுதியில் பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்