< Back
மாநில செய்திகள்
திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டி - நடிகை நமீதா தொடங்கி வைத்தார்
மாநில செய்திகள்

திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டி - நடிகை நமீதா தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
14 May 2023 8:16 PM IST

பா.ஜ.க. சார்பில் நடைபெறும் மின்னொளி கிரிக்கெட் போட்டியை நடிகை நமீதா தொடங்கி வைத்தார்.

திரூப்பூர்,

திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான நமீதா இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக மேடையில் பேசிய நமீதா, எந்த கட்சியிலும் இல்லாத அளவில் ஒற்றுமையை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றார்.

இதைத் தொடர்ந்து டாஸ் போட்டி கிரிக்கெட் போட்டியை நடிகை நமீதா தொடங்கி வைத்தார். மேலும் பேட்டிங், பவுலிங் செய்து வீரர்களை உற்சாகப்படுத்திய அவர், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


மேலும் செய்திகள்