< Back
மாநில செய்திகள்
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
தேனி
மாநில செய்திகள்

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

தினத்தந்தி
|
17 Jan 2023 12:15 AM IST

பெரியகுளத்தில் தி.மு.க. சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

பெரியகுளம் நகர தி.மு.க. சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி பெரியகுளம் புதிய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் வெங்கடாசலம், நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகிகளான மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி, செந்தில்குமார், நகர துணை செயலாளர்கள் சரவணன், சேதுராமன், நகர பொருளாளர் சுந்தரப்பாண்டி ஆகியோர் கலந்துக்கொண்டு போட்டியில் முதலிடம் பிடித்த பெரியகுளம் புளூ கேப்ஸ் அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த வடுகப்பட்டி பி.கே.ஏ. கிரிக்கெட் அணிக்கும் ரொக்கப் பரிசு மற்றும் பரிசுக்கோப்பைைய வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வார்டு நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்