< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி -நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை
|26 March 2024 6:55 AM IST
இரவு 11 மணிக்கு மேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரெயில்கள் செல்லும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வீடு திரும்புவதற்கு மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்லைனில் (சி.எம்.ஆர்.எல். மொபைல் ஆப், பேடிஎம் ஆப், போன் பே, வாட்ஸ்அப்) மூலம் பயணச்சீட்டை பெறலாம். அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்ட்டர்களில் பெற்றுகொள்ளலாம். இரவு 11 மணிக்கு மேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரெயில்கள் செல்லும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.