தூத்துக்குடி
கிரிக்கெட் போட்டி
|தூத்துக்குடியில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் குமாரவேல் 20 ஒவர் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. தூத்துக்குடி சான்ஷான் கிரிக்கெட் அகாடமி சார்பில் நடந்த இந்ந போட்டியினை வ.உ.சி. கல்லூரி தாளாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு, தூத்துக்குடி கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆல்பர்ட் முரளிதரன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சிவக்குமார் மற்றும் சான்ஷான் கிரிக்கெட் அகாடமி உரிமையாளர் ரொனால்ட் முன்னிலையில், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் சிவஞானம் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியின் சிறப்பம்சமானது 19 வயது உட்பட்ட இளம் ஆட்டக்காரர்கள் அனைத்து அணியிலும் 2 பேர் இடம்பிடிப்பர். இந்த நினைவு கோப்பையில் மொத்தம் 17 அணியினர் கலந்து கொண்டனர். முதல் போட்டியில் சான்ஷான் அகாடமி அணி, கோவில்பட்டி பகடா அகாடமி அணிடிய 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தொடக்க விழாவில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் பிரேம்குமார், முரளிக்கண்ணன், பிரபாகரன், சுசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சான்ஷான் அகாடமி பயிற்சியாளர் சசி வினோதன் செய்திருந்தார். வெற்றி பெறும் அணியினருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.30 ஆயிரமும் 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.