< Back
மாநில செய்திகள்
கிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக ஆசை காட்டி ஆன்லைன் மூலம் ரூ.53 ஆயிரம் மோசடி..!
மாநில செய்திகள்

கிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக ஆசை காட்டி ஆன்லைன் மூலம் ரூ.53 ஆயிரம் மோசடி..!

தினத்தந்தி
|
9 Aug 2023 9:27 PM IST

சென்னை புழல் அருகே கிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக கூறி ஆசைகாட்டி, ஆன்லைன் மூலம் 53 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை,

சென்னை புழல் அருகே கிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக கூறி ஆசைகாட்டி, ஆன்லைன் மூலம் நூதன முறையில் 53 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விநாயகபுரத்தை சேர்ந்த உத்திரகுமாரை தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், அரசு வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாக கூறி அவரது கிரெடிட் கார்டுக்கு பாயிண்ட் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த அண்மையில் பெற்ற ரூ.40 ஆயிரம் கடனை கூறி பாயிண்ட்டை பயன்படுத்தி கடனில் 10,000 ரூபாயை குறைக்கலாம் என ஆசைகாட்டியதாக தெரிகிறது.

இதனை நம்பி உத்திரகுமார் ஓடிபி எண்ணை பகிர்ந்த நிலையில், வங்கியிலிருந்து 93 ஆயிரம் ரூபாய் கடனை கட்ட அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர், பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில் 3 தவணைகளாக, 53 ஆயிரம் ரூபாய் வரை மோசடி கும்பல் சுருட்டியது தெரிய வந்தது.

மேலும் செய்திகள்