< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
தொழிற்சாலையில் கிரேன் மோதி தொழிலாளி சாவு
|25 Jun 2022 1:37 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலையில் கிரேன் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோரோல் சிங் (வயது 19). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கோரோல் சிங் தொழிற்சாலையில் வேலை செய்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் கோரோல் சிங் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கொரோல் சிங் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான கோரோல் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.