< Back
மாநில செய்திகள்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல்..!
மாநில செய்திகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல்..!

தினத்தந்தி
|
25 July 2023 1:45 PM IST

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இதில் தற்போது நாம் தரிசனம் செய்யும் ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இந்த நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அபாயகரமான நிலையில் உள்ள கோபுர வாசல் வழியாக பக்தர்கள் சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீர் செய்யாமல் நிலைகளில் கம்புகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் ரூ. 67 லட்சம் செலவில் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோவிலின் கோபுரங்கள், மதில் சுவர்களை முறையாக ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்