< Back
மாநில செய்திகள்
ஜம்பேரி கரையில் விரிசல்-மண் சரிவு
திருச்சி
மாநில செய்திகள்

ஜம்பேரி கரையில் விரிசல்-மண் சரிவு

தினத்தந்தி
|
18 Nov 2022 1:27 AM IST

ஜம்பேரி கரையில் விரிசல்-மண் சரிவு ஏற்பட்டது.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம், வைரிசெட்டிப்பாளையம் எல்லைகளில் உள்ள ஜம்பேரியின் தென்கரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கரையின் வடபுறம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அப்பகுதி விவசாய அணியை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் அங்கு வந்து பார்வையிட்டனர். ஜம்பேரி நிரம்பி, உபரிநீர் வெளியேறும் நிலையில், கரைகளில் விரிசல் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு, கரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்