< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
கடலூர்: ரெயில் தண்டவாளத்தில் விரிசல் குறித்து தகவல் கொடுத்த பெண்...! பெரும் விபத்து தவிர்ப்பு

5 Dec 2022 2:53 PM IST
கடலூரில் ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து தகவல் கொடுத்த பெண்ணுக்கு ரெயில்வே போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருத்துறையூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற மஞ்சு(22) என்ற பெண் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், ரெயில்வே போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் வரும் ரெயில்கள் மாற்று தடத்தில் திருப்பிவிடப்பட்டனர்.
தற்போது ரெயில் தண்டவாளத்தின் விரிசல் சரி செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தின் விரிசல் குறித்து மஞ்சு விரைந்து தகவல் கொடுத்தல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ரெயில்வே போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.