< Back
மாநில செய்திகள்
பாஜகவின் அனைத்து  பொறுப்புகளில் இருந்தும் சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா
மாநில செய்திகள்

பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா

தினத்தந்தி
|
15 Feb 2023 12:33 PM IST

ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்ட்டுள்ளதால் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார்

சென்னை ,

நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்ட்டுள்ளதால் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார்.இன்று காலை சென்னை பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த சி.பி.ராதாகிருஷ்ணன்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை சி.பி.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

மேலும் செய்திகள்