< Back
மாநில செய்திகள்
சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிபட்டன
வேலூர்
மாநில செய்திகள்

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிபட்டன

தினத்தந்தி
|
13 Oct 2023 4:59 PM GMT

விருதம்பட்டு பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுபடி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். 14 மற்றும் 15-வது வார்டுகளில் விருதம்பட்டு மெயின் ரோடுகளில் சுற்றி திரிந்த 3 மாடுகளை ஊழியர்கள் பிடித்தனர்.

பிடிபட்ட ஒரு மாட்டுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபராதம் கட்ட தவறினால் கோட்டை பின்புறம் உள்ள ஜெயின் கோசாலாவில் மாடுகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மாடுகள் பிடிக்கப்பட உள்ளது என்றும் மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் மாடுகளை சாலைகளில் விட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்