< Back
மாநில செய்திகள்
சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்; 3-வது முறை பிடிபட்டால் ஏலம் விடப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மாநில செய்திகள்

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்; 3-வது முறை பிடிபட்டால் ஏலம் விடப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

தினத்தந்தி
|
28 Jun 2024 2:37 PM IST

ஒரே மாடு மூன்றாவது முறை பிடிக்கப்பட்டால் அந்த மாடு ஏலம் விடப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் முதல்முறை பிடிபட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை பிடிபட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் மாட்டின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு 4 ஆயிரத்து 237 மாடுகள் பிடிக்கப்பட்டு, சுமார் 92 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 1,212 மாடுகள் பிடிக்கப்பட்டு 43 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாலையில் பிடிக்கப்படும் மாடுகளுக்கு அடையாள சிப் பொருத்தப்படுவதோடு, ஒரே மாடு மூன்றாவது முறை பிடிக்கப்பட்டால் அந்த மாடு ஏலம் விடப்படும் என்றும், மாடுகளை பிடிக்கும்போது அதன் உரிமையாளர்கள் இடையூறு செய்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.



மேலும் செய்திகள்