< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
அஞ்செட்டி அருகே யூரியா கலந்த தண்ணீரை குடித்த 4 மாடுகள் செத்தன
|8 Jun 2023 12:15 AM IST
தேன்கனிக்கோட்டை
அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சேசுராஜபுரம் அருகே உள்ள அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவன். இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் குருவிளா ஏரி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது 4 மாடுகள் திடீரென ஒவ்வொன்றாக சுருண்டு விழுந்து செத்தன. இதை கண்டு சிவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாடுகளை பரிசோதனை செய்தனர். அப்போது யூரியா கலந்த தண்ணீரை குடித்ததால் மாடுகள் செத்தது தெரியவந்தது.
இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் தண்ணீரில் யூரியா கலந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.