< Back
மாநில செய்திகள்
கழிவறை தொட்டியில் விழுந்த மாடு மீட்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கழிவறை தொட்டியில் விழுந்த மாடு மீட்பு

தினத்தந்தி
|
21 April 2023 12:15 AM IST

கழிவறை தொட்டியில் விழுந்த மாடு மீட்கப்பட்டது.

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள ஆண்டாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் எட்வின் பிரான்சிஸ். இவருக்கு சொந்தமான பசுமாடு அந்த கிராமத்தில் உள்ள கழிவறை தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மாட்டை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கழிவறை தொட்டிக்குள் விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.

மேலும் செய்திகள்