< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து பசுமாடு சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பசுமாடு சாவு

தினத்தந்தி
|
18 Jun 2022 12:46 AM IST

மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலியானது.

காரையூர் அருகே புலனார்குடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து மனோகரன் என்பவரது வீட்டிலும், மாட்டுக் கொட்டகையிலும் விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து பசுமாடு பரிதாபமாக இறந்தது. பசு மாட்டின் அலறல் சத்தம் கேட்டு மனோகரன் வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் மீதும், மாட்டுக்கொட்டகை மீதும் மின்சார கம்பி விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் பாய்ந்து பசுமாடு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்