< Back
மாநில செய்திகள்
குளத்துப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

குளத்துப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம்

தினத்தந்தி
|
1 Jun 2022 12:10 AM IST

கோவில் திருவிழாவை முன்னிட்டு குளத்துப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

திருமயம்:

மாட்டு வண்டி பந்தயம்

திருமயம் அருகே குளத்துப்பட்டி அந்தரநாச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாடு பிரிவில் 6 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு எல்லையை நோக்கி சீறிப் பாய்ந்து ஓடியது.

இதில் முதல் பரிசை குளத்துப்பட்டி சாமி சுரேஷ் என்பவர் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை அறந்தாங்கி தினேஷ் கார்த்தி மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை பரளி கணேசன் என்பவர் மாட்டு வண்டியும் பெற்றது.

பரிசு

சிறிய மாடு பிரிவில் 7 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு ஓடியது. இதில் முதல் பரிசை குளத்துப்பட்டி அழகு சிதம்பரம் என்பவர் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை புதுப்பட்டி கலைஆலோ பிளாக் மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை உஞ்சனை உமாதேவி மாட்டு வண்டியும் தட்டிச்சென்றது.

வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும், சிறப்பாக செயல்பட்ட சாரதிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தை குளத்துப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்