< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
மின்னல் தாக்கி பசு, கன்றுக்குட்டி சாவு
|14 Jun 2022 11:05 PM IST
மின்னல் தாக்கி பசு, கன்றுக்குட்டி உயிரிழந்தது.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது உச்சந்தட்டு கிராமத்தில் சாத்தையா ராஜேஸ்வரி என்பவரது வீட்டின் அருகில் கட்டப்பட்டு இருந்த பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி மீது மின்னல் தாக்கியது. இதில் அந்த பசுவும், கன்றுக்குட்டியும் பரிதாபமாக இறந்தது.