< Back
மாநில செய்திகள்
குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு - சுற்றுலா பயணிகள் கவலை...!
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு - சுற்றுலா பயணிகள் கவலை...!

தினத்தந்தி
|
26 Jun 2022 6:37 PM IST

குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதி நாளை எட்டும் நிலையில் இதுவரை சீசன் தொடங்கவில்லை.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் அருவிகளில் நேற்று நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர். இந்த நிலையில் தற்போது குற்றாலத்தில் சாரல் மழை பெய்யாததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வந்தனர்.

அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் சுற்றுலா பயணிகளை நீண்ட வரிசையில் நின்று குளிக்க போலீசார் அனுமதித்தனர்.

மேலும் செய்திகள்