< Back
தமிழக செய்திகள்
சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்..!
தமிழக செய்திகள்

சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்..!

தினத்தந்தி
|
19 Nov 2023 10:40 AM IST

ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்துவிட்டு குற்றாலநாதர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் சீரான தண்ணீர் விழுகிறது.

இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து செல்கிறார்கள். இதனால் அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்துவிட்டு குற்றாலநாதர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் ஞாயிறு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். வாகன நெருக்கடி மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் போலீசார் அருவி பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்