< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு: கி.வீரமணி வரவேற்பு
|10 Jan 2024 12:08 AM IST
பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறானது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலம் விளங்கிவிட்டது.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறானது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலம் விளங்கிவிட்டது. கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் வரக்கூடியது. அதனை புறக்கணித்து, மத்திய அரசு அவசர அவசரமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது.தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் இதனை செயல்படுத்த முடியாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு என்பது மாநில உரிமைகளைத் தன் விருப்பம் போல் பறிக்கலாம் என்ற மத்திய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடியாகும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.