< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகர் பாலியல் வழக்கு: 4 பேருக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு..!
|30 May 2022 6:45 PM IST
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்ற காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன், ஹரிஹரன் ஆகிய நான்கு பேர்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் 4 பேரையும் ஜூன் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் 4 பேரையும் மதுரை சிறையில் அடைத்தனர்.