< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
1 Aug 2022 5:09 PM IST

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 108 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவி ஶ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17-ந்தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி பள்ளி சூறையாடப்பட்டது. இது தொடர்பாக முதல் கட்டமாக 108 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடந்த 18-ந்தேதி கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களின் நீதிமன்ற காவலை நீட்டிப்பதற்காக இன்று அவர்கள் காணொலி காட்சி மூலம் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்னால் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி, அவர்களுக்கு நீதிமன்ற காவலை வருகிற 12-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்