< Back
மாநில செய்திகள்
மீனம்பாக்கம் ரெயில் நிலைய தரைத்தளத்தில் பயணச்சீட்டு கவுண்ட்டர் அமைக்க கோரி வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்
சென்னை
மாநில செய்திகள்

மீனம்பாக்கம் ரெயில் நிலைய தரைத்தளத்தில் பயணச்சீட்டு கவுண்ட்டர் அமைக்க கோரி வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்

தினத்தந்தி
|
26 Feb 2023 2:54 PM IST

மீனம்பாக்கம் ரெயில் நிலைய தரைத்தளத்தில் பயணச்சீட்டு கவுண்ட்டர் அமைக்க கோரி வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''சென்னை மீனம்பாக்கம் ரெயில் நிலையத்தில், முதல் மாடியில் உள்ள கவுண்ட்டரில்தான் பயணச்சீட்டு பெற வேண்டியுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் முதல் மாடிக்கு சென்று பயணச்சீட்டு வாங்குவதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே, தரைத்தளத்தில் பயணச்சீட்டு கவுண்ட்டர் அமைக்க தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்