< Back
மாநில செய்திகள்
கோர்ட்டு ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில்
சேலம்
மாநில செய்திகள்

கோர்ட்டு ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில்

தினத்தந்தி
|
18 Oct 2023 1:15 AM IST

பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ் வழங்கிய கோர்ட்டு ஊழியருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 58). இவர் சேலம் கோர்ட்டில் காவலாளியாக பணியில் சேர்ந்து பின்னர் அலுவலக உதவியாளராக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து அடுத்த நிலை பதவி உயர்வு பெறுவதற்காக ஈஸ்வரன் கோர்ட்டில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். இதை சரிபார்த்த போது அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஈஸ்வரனை கைது செய்தனர். இதனிடையே அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு தற்போது ஓமலூர் கோர்ட்டில் காவலாளியாக வேலை பார்த்தார்.

மேலும் போலி சான்றிதழ் வழங்கியது தொடர்பான வழக்கு சேலம் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது ஈஸ்வரனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு தங்க கார்த்திகா தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்