< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கோர்ட்டில் தூய்மை பணி
|2 Oct 2023 11:26 PM IST
கோர்ட்டில் தூய்மை பணி நடைபெற்றது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி பல்கீஸ் ஆலோசனையின் பேரில், தூய்மையே சேவை என்ற நிகழ்வு கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் சார்பு நீதிபதி அண்ணாமலை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சந்திரசேகர், குற்றவியல் நீதித்துறை நடுவர் சுப்புலட்சுமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி மற்றும் கோர்ட்டு ஊழியர்கள், சட்டப்பணிகள் ஆணை குழுவின் வக்கீல்களும், ஊழியர்களும், தனியார் அறக்கட்டளையினரும் ஒன்றிணைந்து கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.