< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு ஐகோர்ட்டு அனுமதி
|28 April 2023 7:19 PM IST
உறுப்பினர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருவதாக அரசுத்தரப்பு தெரிவித்ததை ஏற்று ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை,
உறுப்பினர் பட்டியலில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உறுப்பினர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குறைகளை நிவர்த்தி செய்ய அரசு 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதால், கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை ஏற்று வாக்காளர் பட்டியலை திருத்த அவகாசம் வழங்கி, கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அரசுக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.