< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கூரியர் நிறுவன பூட்டை உடைத்து கொள்ளை- போலீசார் விசாரணை
|28 Jun 2023 2:31 AM IST
கூரியர் நிறுவன பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூரமங்கலம்:
சேலம் மாமாங்கம் அருகே தனியா கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷா மனைவி சபீரா (வயது 32) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், வேலை முடிந்து கூரியர் நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். கூரியர் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த போது, நிறுவன பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பணப்பெட்டியும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 91 ஆயிரத்து 903 ரூபாய் கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.