< Back
மாநில செய்திகள்
ராஜபாளையத்தில் தம்பதி கொலை
விருதுநகர்
மாநில செய்திகள்

ராஜபாளையத்தில் தம்பதி கொலை

தினத்தந்தி
|
17 July 2022 6:46 PM GMT

ராஜபாளையத்தில் தம்பதி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்.

ராஜபாளையத்தில் தம்பதி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பதி பிணம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் உள்ள தெற்கு வைத்தியநாதபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75.) தனியார் நூற்பாலையில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.. இவருடைய மனைவி குருபாக்கியம்(68). இவரது மகன்கள் இருவரும் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர். ஆதலால் இவர்கள் இருவரும் இங்கு தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2 தினங்களாக கணவன், மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது இருவரும் தனித்தனி அறைகளில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

ெகாலையா?

அவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அவர்களது உறவினர் ஜெயமணி கொடுத்த தகவலின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்ெகாண்டனர்.

இருவரின் வாய்ப்பகுதியில் ரத்தம் வடிந்த நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்ததும், வீட்டின் பல்வேறு இடங்களில் மிளகாய் தூள் சிதறி கிடந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர்(பயிற்சி) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தனிப்படை அமைப்பு

துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் (பொறுப்பு) தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுதிர், வெங்கடேஷ், ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம், வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சூலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் உள்பட தனிப்படை குழு அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலைகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும், சத்திரப்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடங்கள், மருத்துவ துணி உற்பத்தி நிறுவனங்களுக்கும் ராஜகோபால் பல கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ஆதலால் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக யாரேனும் இவர்களை கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்