< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதலில் தம்பதி படுகாயம்
|30 July 2023 3:04 PM IST
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதலில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 39). இவரது மனைவி மாலதி (32). இருவரும் கடந்த 26-ந் தேதி மாலை பேரம்பாக்கத்தில் உள்ள நரசிம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மணவாளநகர் அருகே வந்தபோது அவர்களுக்கு எதிரே வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் இருவரும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.