< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சிவகாசியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
|3 Oct 2023 2:18 AM IST
சிவகாசியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.
சிவகாசி காரனேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தேவர்குளம் பஞ்சாயத்தில் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளி மச்சகாளை நாட்டுநலப்பணி திட்ட முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பள்ளியின் தலைமை ஆசிரியை கமலினி, திட்ட அலுவலர் சந்திரகலா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியும், 2-வது நாள் ரத்ததான விழிப்புணர்வு பேரணியும், 3-வது நாள் டெங்கு, ரேபிஸ் நோய் விழிப்புணர்வு பேரணியும், 4-வது நாள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியும், 5-வது நாள் நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.