< Back
மாநில செய்திகள்
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

தினத்தந்தி
|
14 Nov 2022 12:15 AM IST

நயினாரகரத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது

கடையநல்லூர்:

இடைகால் எம்.எம்.மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் நயினாரகரத்தில் ஒரு வாரம் முகாம் நடைபெற்றது. முன்னதாக தொடக்க விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா என்ற முத்து தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சொர்ணம் குமார், ஒன்றிய கவுன்சிலர் மாரிச்செல்வி, வார்டு கவுன்சிலர் கனகலட்சுமி, முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளிச் செயலரும், தலைமை ஆசிரியருமாகிய சோ.ராஜசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வ சக்திவடிவேல், ஆசிரியர்கள் சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து நயினாரகரம் சிவன் கோவில், குலசேகர அம்மன் கோவில், விநாயகர் கோவில், முப்புடாதி அம்மன் கோவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை திராவிட சுப்பு செய்திருந்தார்.

மேலும் செய்திகள்