< Back
மாநில செய்திகள்
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

தினத்தந்தி
|
3 Nov 2022 12:15 AM IST

கடையம் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது

கடையம்:

வெங்காடம்பட்டி ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் நடைபெற்றது. இந்த முகாம் வெங்காடம்பட்டி ஊராட்சியில் 7 நாட்கள் நடைபெற உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு, மேல்நிலைப்பள்ளி நிர்வாக அதிகாரி அருள் அந்தோணி மிக்கேல், தலைமை ஆசிரியை அமிர்தசிபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் வரவேற்றார். ரவி, வெங்காடம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் உதவி திட்ட அலுவலர் பொன்ராஜ் செபஸ்டியன் நன்றிகூறினார். இதில் ஊராட்சி செயலர் பாரத் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்