< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
|23 Oct 2023 12:15 AM IST
மயிலாடுதுறை அருகே மூவலூரில்வ நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
மயிலாடுதுறை அருகே மூவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற 7 நாள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் முருகானந்தம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருள் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் மூவலூர் மூர்த்தி, மூவலூர் ஏழுமலையான் ஐ.டி.ஐ. மேலாளர் துரை சரவணன், மூவலூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர். முடிவில் உதவித் திட்ட அலுவலர் கமலநாதன் நன்றி கூறினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியை நாட்டுப் நல பணி திட்ட மாணவர்கள் மேற்கொண்டனர்.