< Back
மாநில செய்திகள்
பழங்குடி மக்கள் உயர்பதவிகளுக்கு வந்தால்தான் நாடு வளர்ந்ததாக கருத முடியும் - கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

'பழங்குடி மக்கள் உயர்பதவிகளுக்கு வந்தால்தான் நாடு வளர்ந்ததாக கருத முடியும்' - கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
16 Nov 2023 8:55 AM IST

பழங்குடி மக்களுக்கு அனைத்து சலுகைகளும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பழங்குடியினர் கவுரவ தினம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற மாசி சடையன், வடிவேல் கோபால், ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதி உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்டத்தில் பழங்குடி மக்களின் பங்கு பெரிய அளவில் உள்ளது என்று தெரிவித்தார். பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்ற பெயரில் மிகப்பெரிய சுரண்டல் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

பழங்குடி மக்களுக்கு அனைத்து சலுகைகளும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பழங்குடி மக்கள் உயர்பதவிகளுக்கு வந்தால்தான் நாடு வளர்ச்சி அடைந்ததாக கருத முடியும் என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்