< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சதுரகிரி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
|9 Sept 2023 3:50 AM IST
சதுரகிரி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
வத்திராயிருப்பு,
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ், பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பேரையூர் சரக ஆய்வர் சடவர்ம பூபதி ஆகியோர் முன்னிலையில் இந்த பணி 2 நாட்களாக நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.44, 80,539, 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளி ஆகியவை கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.