< Back
மாநில செய்திகள்
கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
22 July 2023 11:11 PM IST

ஆத்துவாம்பாடியில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே ஆத்துவாம்பாடியில் காவல் துறை சார்பில் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசுகையில், சாராயம் விற்பனை செய்து வருபவர்கள், திருந்தி வாழ காவல்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் பெற வழி வகை செய்யப்படுகிறது என்றார்.

மேலும் விவசாய தொழில் செய்து சாகுபடி செய்வது, குழந்தைகள் படிக்கவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் சைபர் கிரைம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு, கேளூர் வருவாய் ஆய்வாளர் வரதராஜன், ஆத்துவாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சுகந்தி, ஆத்துவாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நாராயணன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்