< Back
மாநில செய்திகள்
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில்  மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

தினத்தந்தி
|
5 Aug 2022 10:41 PM IST

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடந்தது. அதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீராங்கனைகள், தேசிய மாணவர் படை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கல்லூரியில் ஒதுக்கப்பட்ட 64 இடங்களில் 282 விண்ணப்பித்து இருந்தனர்.

கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாரதி, கணித துறை தலைவர் எமீமன் நவஜோதி, பொருளாதார துறை தலைவர் புவனேஷ்வரி ஆகியோர் கலந்தாய்வை நடத்தினர். அதில் 29 விளையாட்டு வீராங்கனைகள், 29 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 6 ராணுவ வீரர்கள் என 64 பேருக்கு கல்லூரியில் சேர்க்கை வழங்கப்பட்டது. அப்போது விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது. மேலும் அவர்கள் தேர்வு செய்ய விரும்பும் பாடப்பிரிவுகள் குறித்து கலந்தாய்வில் ஈடுபட்ட பேராசிரியைகள் கேட்டறிந்தனர்.

இன்று (சனிக்கிழமை) பொருளியல், வணிகவியல் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 10 மற்றும் 11-ந் தேதிகளில் வெவ்வேறு பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வுகள் நடைபெறும் என கல்லூரி பேராசிரியைகள் கூறினர்.

மேலும் செய்திகள்