< Back
மாநில செய்திகள்
கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
1 July 2023 12:15 AM IST

முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முத்துப்பேட்டை பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த காலசாமி என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணியிடமாற்றம் பெற்று வேறு பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலராக யசோதா கூடுதல் பொறுப்பாக இருந்து வருகிறார். இவர் வாரத்திற்கு சில நாட்கள் மட்டுமே வந்து செல்வதால் பேரூராட்சியில் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளதால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். நேற்று மாலை 3.30 மணிக்கு முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் நடைபெறும் என அனைத்து கவுன்சிலர்களுக்கும் தபால் அனுப்பபட்டது. அதன்படி நேற்று பேரூராட்சி தலைவர் துணைத்தலைவர் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் வந்திருந்தனர். ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர் வரவில்லை. இதனால் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., எஸ்.டி.பி.ஐ. கவுன்சிலர்கள் அலுவலகம் வாசலுக்கு வந்து செயல் அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்