< Back
மாநில செய்திகள்
கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
28 Feb 2023 7:13 PM GMT

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவசர கூட்டம்

கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று சாதாரண மற்றும் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாதாரண கூட்டத்தில் 73 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 24 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும், வருகிற 4-ந்தேதி கரூர் வருகை தரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாநகராட்சி சார்பிலும், கவுன்சிலர்கள் சார்பிலும் சிறப்பான வரவேற்பு தருவதும் எனவும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வாக்குவாதம்

இதையடுத்து, காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் நடைபெற்ற இடைத்தேர்தலில் சிறப்பாக செயலாற்றிய தி.மு.க. கவுன்சிலர்களுக்கும், வெற்றி வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார். அப்போது குறுக்கிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் தேர்தல் சம்பந்தமாக எதற்கு பேசுகிறார் என்றும், வெற்றி வாய்ப்பு குறித்து பேசக்கூடாது எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்துக்கு மேயரும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து 10 நிமிட வாக்குவாதத்திற்கு பிறகு கூட்டம் நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்