< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு
|17 July 2023 11:43 PM IST
மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மஞ்சப்பை உபயோகப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைெபற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சப்பையை உபயோகப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. மேலும், மாவட்ட அளவில் கிராமங்கள் தோறும் தெருமுனைபிரசாரம், கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரம், சுவரொட்டி மற்றும் விளம்பர பதாகைகள் போன்றவைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த கலை நிகழ்ச்சிகள் வருகிற 28-ந்தேதி வரை 12 நாட்களுக்கு நடைபெற உள்ளது, என்றார்.