< Back
மாநில செய்திகள்
ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
18 July 2023 12:30 AM IST

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அடுத்த அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் விவசாயிகள் 197 சுரபி ரக மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 400 முதல் ரூ.7,025 வரை ஏலம் போனது. மொத்தம் 197 சுரபி ரக பருத்தி மூட்டைகள் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி விலை சற்று உயர்ந்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்