< Back
மாநில செய்திகள்
ரூ.21 லட்சத்துக்கு பருத்தி பருத்தி, எள் ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ரூ.21 லட்சத்துக்கு பருத்தி பருத்தி, எள் ஏலம்

தினத்தந்தி
|
14 March 2023 6:45 PM GMT

திருச்செங்கோட்டில் ரூ.21 லட்சத்துக்கு பருத்தி பருத்தி, எள் ஏலம் நடைபெற்றது.

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் பிடி ரகம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 116 முதல் ரூ.8 ஆயிரத்து 100 வரையிலும் ஏலம் போனது. 655 பருத்தி மூட்டைகள் ரூ.15 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.

இதேபோல் எள் 50 மூட்டைகள் வரத்து வந்தது. கருப்பு எள் கிலோ ரூ.122 முதல் ரூ.159 வரையிலும், சிவப்பு எள் கிலோ ரூ.127 முதல் ரூ.159 வரையிலும், வெள்ளை எள் கிலோ ரூ.113 முதல் ரூ.165 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்