< Back
மாநில செய்திகள்
பருத்தி விளைச்சல் அதிகரிப்பு; விலை குறைவால் விவசாயிகள் ஏமாற்றம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பருத்தி விளைச்சல் அதிகரிப்பு; விலை குறைவால் விவசாயிகள் ஏமாற்றம்

தினத்தந்தி
|
29 Jun 2022 4:18 PM GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி, இதம்பாடல் பகுதியில் பருத்தியின் விலை திடீரென குறைந்ததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி, இதம்பாடல் பகுதியில் பருத்தியின் விலை திடீரென குறைந்ததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

பருத்தி விளைச்சல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி, இதம்பாடல், சிக்கல், தேரிருவேலி, திருஉத்திரகோசமங்கை, ஆனைகுடி மேலசீத்தை, காவனூர், ஆர்.எஸ். மங்கலம், மங்கலம் உள்ளிட்ட மாவட் டத்தின் பல்வேறு ஊர்களிலும் பருத்தி விவசாயம் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் பருத்தி விளைச்சல் சீசன் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் ஆகும்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருத்தி விவசாய சீசன் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஏர்வாடி, இதம்பாடல், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் பருத்தி விளைச்சல் அதிகஅளவு இருந்து வரும் நிலையில் திடீரென விலை குறைந்து உள்ளதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

விலை குறைவு

இதுபற்றி ஏர்வாடி அருகே இதம்பாடல் கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி சரசுவதி கூறியதாவது:- இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் எதிர்பார்த்ததை விட நன்றாகஉள்ளது. பருத்தி சீசன் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் ஒரு கிலோ பருத்தி ரூ.120 வரையிலும் விலை போனது. ஆனால் திடீரென கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ பருத்தி ரூ. 60-க்கு மட்டுமே விலை போகிறது. விலை குறைந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

வியாபாரிகளே திட்டமிட்டு பருத்திக்கான விலையை குறைத்து வாங்கி வருகின்றனர். இந்த ஆண்டு பருத்தி சீசன் இந்த பகுதியில் முடிவடைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்