< Back
மாநில செய்திகள்
உள்ளூர் சந்தையில் பஞ்சு விலை உயர வாய்ப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

உள்ளூர் சந்தையில் பஞ்சு விலை உயர வாய்ப்பு

தினத்தந்தி
|
20 April 2023 1:25 AM IST

உள்ளூர் சந்தையில் பஞ்சு விலை உயர வாய்ப்பு உள்ளது.


பருத்தி சாகுபடி வெகுவாக குறைந்துள்ள நிலையில் பஞ்சு விலை ஒரு கண்டி தற்போது ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.62 ஆயிரம் வரை இருக்கும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் இதன் விலை ரூ.70ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பஞ்சு ஏற்றுமதி கடந்த ஆண்டு 42 லட்சம் பேலாக இருந்த நிலையில் தற்போது 30 லட்சம் பேலாக குறைந்துவிட்டது. அடுத்து இதேநிலை நீடித்தால் ஏற்றுமதி 25 லட்சம் பேலாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வெளிநாடுகளில் பஞ்சு தேவை குறைவாக உள்ளது காரணம் என கூறப்படுகிறது. உள்ளூர் நூற்பு ஆலைகள் முழுமையாக இயங்கும் நிலையில் பஞ்சு தேவை அதிகம் இருந்தாலும் விவசாயிகள் தற்போது தங்களது பஞ்சு இருப்பை விற்பனை செய்யாத நிலையில் வரும் மாதங்களில் அதனை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதால் தேவைக்கேற்ப பஞ்சு கிடைத்தாலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்