< Back
மாநில செய்திகள்
ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
சேலம்
மாநில செய்திகள்

ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
7 Jan 2023 7:30 PM GMT

கொங்கணாபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது.

எடப்பாடி:-

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 5 ஆயிரத்து 750 பருத்தி மூட்டைகள் 1,250 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு, கூட்டுறவு துறை அலுவலர்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி.ரக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 600 முதல் ரூ.8 ஆயிரத்து 700 வரை விற்பனையானது. டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 600 முதல் ரூ.8 ஆயிரத்து 350 வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 600 முதல் ரூ.5 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. 5 ஆயிரத்து 750 பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் போனது.

Related Tags :
மேலும் செய்திகள்