திருவாரூர்
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
|திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 699-க்கு விற்பனையானது.
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 699-க்கு விற்பனையானது.
பருத்தி ஏலம்
திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி நடைபெற்ற நிலையில், தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
அதிகபட்சம் 6,699-க்கு...
பின்னர் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச்சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர். அதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.
இதில் பருத்தி குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 699-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 709-க்கும் விலை கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 114-க்கு விற்பனையானது.