< Back
மாநில செய்திகள்
குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
திருவாரூர்
மாநில செய்திகள்

குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,389-க்கு விலைபோனது.

பருத்தி ஏலம்

குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்றுமுன்தினம் மாலை பருத்தி ஏலம் நடைபெற்றது. இதற்கு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் தி.ரமேஷ், குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்திற்கு குடவாசல், அடவங்குடி, செல்லூர், மணப்பறவை, மஞ்சக்குடி, சிமிழி, சேங்காலிபுரம், 52 புதுக்குடி, மேல உத்திரங்குடி, கீழ் உத்திரங்குடி, அரசூர், நாச்சியார்கோவில், வடமட்டம், திருவிடச்சேரி ஆகிய கிராமங்களில் இருந்து 206 விவசாயிகள் 672 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து இருந்தனர்.

அதிகபட்சமாக ரூ.6,389-க்கு விலைபோனது

இதில் கோவை, பண்ருட்டி, விழுப்புரம், சேலம், திருப்பூர், காங்கேயம், செம்பனார்கோவில், கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.6389-க்கும், குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.5534-க்கும் விலைபோனது. சராசரியாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.6094 விற்பனை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.27 லட்சத்து 52 ஆயிரத்து 190-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்